விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது..
தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு தெரிந்த பிரபலங்களை ஒரே வீட்டிற்குள் விட்டு அவர்களுக்குள் கலகம் மூட்டி விடுகிறார்கள்.
முதல் மூன்று பிக் பாஸ் சீசன்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. ஆனால் கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அவ்வளவாக எடுபடவில்லை.
போட்டியாளர்களும் ரசிக்கும்படி இல்லை, அதேபோல் கொடுக்கப்பட்ட விளையாட்டுகளும் யாரையும் கவரவில்லை. வெறும் காதல், சண்டையை மட்டுமே வைத்து போனமுறை வண்டியை ஓட்டி விட்டது விஜய் டிவி. அதனால் முன்னர் கிடைத்த டிஆர்பி போனமுறை இல்லை என்பதே அவர்களின் கவலை.
அதனால் இந்த முறை போட்டியாளர்கள் முதல் புரோமோக்கள் வரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களை கவரும் விதத்தில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது விஜய் டிவி நிறுவனம். கமலஹாசனும் இந்த முறை தூய தமிழில் பேசுகிறேன் என்ற கெள்கையுடன் இருக்கப் போவதில்லையாம். தன்னுடைய பங்குக்கு இறங்கி அடிக்கப் போகிறாராம் உலகநாயகன்.
அது முதல் புரோமோ வீடியோவிலேயே தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முதல் முறையாக ஒரு வித்தியாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டு மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5.
சந்தோசமான கல்யாணத்தில் ஆரம்பித்து பின்னர் சண்டையில் முடிந்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.