மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (2) மாலை மேலும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை(3) காலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை(2) மாலை மேலும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மன்னார் முருங்கன் செட்டியார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 1704 கொரோனா தொற்றாளர்களும்,தற்போது வரை மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் 1721 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.