இளம்தாயொருவரை கொலை செயு்து காமுகனை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி இந்த கொலை நடந்தது.
பன்னிரட்டிய மாவத்தை பகுதியிலுள்ள குடியிருப்பபொன்றில் அறையொன்றை வாடகைக்கு பெற்று இளம் தம்பதியொன்று குடியிருந்தது. 23 வயதான பிரியதர்சனி, 25 வயதான கணவர், 4 வயதான மகன் ஆகியோர் குடியிருந்தனர்.
கணவர் மேசன் தொழிலாளி. கடந்த 2மாதங்களின் முன்னர் அந்த வாடகை அறைக்கு குடிவந்திருந்தனர்.
கணவர் கடந்த 24 ம் தேதி வேலைக்காக பன்னிப்பிட்டிக்கு சென்றிருந்தார். அறையில் இறந்த பெண்ணும் குழந்தையும் மட்டுமே இருந்தனர். அறைக்குள் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் மஹரகம பொலிஸாருக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அந்த குடியிருப்பின் பல அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். இதில் ஒரு ஜோடியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த குடியிருப்பின் பிறிதொரு அறையில் தங்கியிருந்த ஜோடியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இளம் ஆண் ஒருவரே அந்த கொலையை நடத்தியது தெரிய வந்தது.
24 ஆம் தேதி அதிகாலை 01.15 மணியளவில் அந்தப் பெண் கழிப்பறைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த சத்தத்தைக் கேட்டதாகவும், அவர் கழிவறைக்குச் சென்று திரும்பியபோது, அந்தப் பெண்ணைக் கட்டிப்பிடித்ததாகவும் சந்தேக நபர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அவருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென நீண்டநாள் ஆசையிருந்ததால் கணவர் இல்லாத நேரத்தில் அவரது நடமாட்டத்தை அவதானித்து வந்ததாகவும் தெரிவித்தார்.
திடீரென கட்டிப்பிடித்த தன்னை, அந்தப் பெண் தள்ளி விட்டதாகவும், அதனால் நிலத்தில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக எழுந்து அந்த பெண்ணை மீண்டும் கட்டிப்பிடிக்க முயன்றபோது, பெண் தவறி நிலத்தில் விழுந்து சத்தமிட முயன்றபோது, அருகிலுள்ள கட்டையொன்றினால் பெண்ணின் தலையில் அடித்ததாக தெரிவித்துள்ளார்.
மயக்கமடைந்த பெண்ணை அவரது அறைக்கு தூக்கிச் சென்று படுக்க வைத்ததாகவும், அப்போது குழந்தை விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்ததால், அச்சமடைந்து அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் எதுவும் தெரியாததை போல தனது அறைக்கு சென்று மனைவியுடன் உறங்கியதாக தெரிவித்துள்ளார்.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு மாணவி அதிகாலையில் படிக்க எழுந்தபோது, தொடர் அழுகையை அவதானித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அந்த அறையை நெருங்கி உள்ளே பார்த்தனர். குழந்தையின் அழுகை நிற்கவில்லை. அவர்கள் சத்தமிட்டு கூப்பிட்டும் தாயார் எழுந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அயலவர்கள் அறைக்குள் சென்ற போது, அந்த பெண் மயக்கநிலையில் இருந்தார். உடனடியாக அவர் களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சந்தேகநபர் கடந்த 01 ஆம் திகதி கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.