அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவினால் நேற்று (2) தொடக்கம் அமுலாகும் வரையில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் அதிகபட்ச மொத்த விலை 116 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதி செய்யப்பட்ட வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 125 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 128 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பச்சையரிசி மற்றும் சிவப்பரிசி ஒரு கிலோ கிராமிற்கான அதிகபட்ச சில்லறை விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 103 ரூபாவாக நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.