25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரிலும் ஊரடங்கு அமுலில் இருக்கிறதாம்!

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தொடக்கம் சிலர் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அதே நேரம் பலர் அத்தியாவசிய காரணங்கள் இன்றியும் நகர் பகுதிகளை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அதே நேரம் இன்றைய தினம் வங்கி நடவடிக்கைகளும் இடம் பெறுகின்ற நிலையில் மக்களின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போது மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நிலையை மதிக்காது செயல்படுவதுடன் அனுமதி பெறாத பல வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி வியாபார நிலையங்கள் மக்களை அதிக அளவில் ஒன்று கூட்டி விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பயணங்களை தொடரவும்,ஏனைய நடவடிக்கை களுக்காகவும் பாஸ் அனுமதி பெற்றுக் கொள்ள அதிகளவானவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு சென்று வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

east tamil

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

Leave a Comment