25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாவது தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை: வைத்தியர் நிமால் அருமைநாதன்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாவது தடுப்பூசி திகதி கடந்த மாதம் இறுதி பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது, இருப்பினும் மாவட்டத்திற்கான தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இம்மாதம் 4ஆம் திகதிக்கு பின்னர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 4ஆம் திகதியும் இரண்டாவது தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன்
தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்திற்கான தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்கப்பெறும்.  எனவே அப்போது நாம் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்குவோம்.

இம் முறை இரண்டாவது தடுப்பூசி, முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட குறிப்பிட்ட நிலையங்களில் மாத்திரம் செலுத்தப்படாது. பொது மக்கள் அதிகமான ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் பிரதேசங்கள் ரீதியாக தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசி கிடைத்ததும் மேற்படி விபரங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு
அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

east tamil

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

Leave a Comment