30.1 C
Jaffna
March 16, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் 25 வயதான இளைஞன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கோவிட் தொற்று காரணமாக 25 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று மாலை (31) செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவிட் தொற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டில் சென்று குறித்த இளைஞன் தங்கியிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்த 25 வயதுடைய மன்சூர் முகமட் சப்ரான் என்பவராவார்.

சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டக்களப்பு, ஓட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்வதற்காக இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

சொன்னபடி செயற்பட தவறும் ஜேவிபி: பேராயர் அதிருப்தி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!