25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
குற்றம்

கணவர்களால் தாக்கப்பட்ட 30 மனைவிகள் ஒரே வைத்தியசாலையில்!

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கடந்த 10 நாட்களில் (ஓகஸ்ட் 21 முதல் ஓகஸ்ட் 31 வரை) குடிபோதையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக காயமடைந்த 150 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் தாக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

ஏனையவர்கள் அயலிலுள்ளவர்களுடனான தகராற்றினால் காயமடைந்த ஆண்களாவர்.

மேலும், கடந்த 10 நாட்களில் வீட்டில் விழுந்து, தீக்காயம் அடைந்த சுமார் 100 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment