கைதடி முதியோர் இல்லத்தில் 38 முதியவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கைதடி அரசாங்க முதியோர் இல்லத்தில் முதியவர்கள் சிலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 38 முதியவர்களும், 2 உத்தியோகத்தர்களும் தொற்றுக்குள்ளானது தெரிய வந்துள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 7 உத்தியோகத்தர்களிற்கும் இன்று தொற்று உறுதியானது.
இதேவேளை, தென்மராட்சி பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களின் ஆர்வம் குறைவாக உள்ளதாக தெரிய வருகிறது. தென்மராட்சி பகுதி ஆபத்தான வலயமாக மாறி வரும் நிலையில், மக்கள் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்வதே தம்மையும், சமூகத்தையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழியென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.