25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் அறுக்கப்பட்ட வலைகளை கரையில் தீயிட்ட மீனவர்!

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்புக்குள்ளான மீனவர் ஒருவர் தனது எஞ்சிய வலைகளை தீயிட்டு கொழுத்திய சம்பவம் இன்று பருத்தித்துறை முனைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால், இலங்கை மீனவர்கள் தமது பல இலட்சம் பெறுமதியான வலைகளை நாளாந்தம் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையிலேயே பருத்தித்துறை முனை பகுதி மீனவர் இந்திய இழுவை மடி படகால் தனது பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வலைகளை இழந்துள்ளார்.

இன்று கரை திரும்பிய மீனவர், மன விரக்தியுற்ற நிலையில், இனிமேல் கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலையில் தனது எஞ்சிய வலைகளை பெட்ரோல் ஊற்றி தீயிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள்,

கடற்றொழில் அமைச்சரிடம் பல தடவைகள் முறையீடு செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து முறைப்பாட்டுத் துண்டை தருமாறு அமைச்சர் தெரிவித்து பல முறைப்பாட்டு துண்டுகள் கொடுக்கப்பட்டும் எந்த இழப்பீடும் இல்லை. கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை இந்திய இழுவைமடி படகுகள் வருகின்றன.

மீனவர்கள், கடற்றொழில் அமைச்சர், மற்றும் கடற்படை அனுமதியளித்தால் எல்லை தாண்டிய இழுவை மடி படகுகளை நாம் கைப்பற்றி உரிய தரப்புக்களிடம் ஒப்படைப்போம். நாம் பல இலட்சம் வங்கிகளில் கடன் பெற்று வலைகளை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபடும்போது, நாளாந்தம் இவ்வாறு வலைகளை இழந்து வருவதானால் பொருளாதார ரீதியாக எமது குடும்பம் வீதிக்கு வந்துள்ளன.

நூற்றுக்கு மேற்பட்ட படகுகள் தொழிலிற்கு செல்லாது கரையில் கட்டப்பட்டுள்ளன.

இதே வேளை உள்ளூர் இழுவை படகுகளும், மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களும் தற்போது மிகமிக அதிகமாக இடம் பெறுகிறது. எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் மற்றும் உள்ளூர் சுருக்குவலை தொழில், கடலட்டை தொழில் என்பனவும் மீன் பெருக்கிடங்களை அழித்து வருகின்றன.

கடற்றொழில் அமைச்சர் நேரடியாக அதிகாரிகளுக்கு கட்டளையிட்டும் அவர்கள் கையூட்டை பெற்று சட்டவிரோதமான தொழில்களை தடுப்பதில்லை. கடற்படை எமது ஆவணங்களை மட்டும் பரிசீலிக்கிறது. ஆனால் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தவில்லை.

ஈழத் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டும் தமிழ்நாட்டு முதலமைச்சர் எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகள் வருவதையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய இலங்கை தமிழ் மீனவர்களை மோதவிடும் பிரச்சினைகளை நாங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து திருடிய காணிகளை விடுவிக்க வேண்டும் – ரவிகரன்

east tamil

சஜித் பிரேமதாச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையே முக்கிய சந்திப்பு

east tamil

வாழைச்சேனை காகித தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

east tamil

சாலை விதியை மீறிய பஸ் ஓட்டம் – விபத்தில் 11 பேர் காயம்

east tamil

மல்லாவியில் தீவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

Pagetamil

Leave a Comment