வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மூன்றுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தால் வீடு வீடாகச் சென்று இன்று (30.08) முன்னெடுக்கப்பட்டது.
நாடு பூராகவும் இதுவரை தடுப்பூசிகள் ஏற்றாத 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 800 மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மூன்றுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 40 மூத்த பிரஜைகளுக்கு அஸ்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசிகள் இராணுவத்தால் வீடுகளுக்கு சென்று ஏற்றப்பட்டது. இதன்போது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.