போர்மௌனிக்கப்பட்டு 12, வருடங்கள் கடந்த போதும் வடக்கு கிழக்கில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இலங்கை அரசாலோ அல்லது சர்வதேசத்தாலோ எந்த ஆக்கபூர்வமான தீர்வும் கிடையாமையால் ஏக்கப் பெருமூச்சுடனேயே இன்றைய சர்வதே காணாமல் ஆக்கப்பட்டோர் தின்தையும் கடக்க வேண்டி உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30, இன்று அதுதொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்-
ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமல் போனோர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1981ஆம் ஆண்டில் கொஸ்தாரிக்கா நாட்டில், கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பு இவ்வாறானதொரு தினம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என யோசனையை முன்வைத்திருந்தனர். இதையடுத்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை காணாமல் போனவர்களை பாதுகாப்பது தொடர்பான பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளது.
அதன்படி ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இனங்காணப்படாத பகுதிகளில் தடுத்து வைத்தல், உறவினர்களுக்கு தெரியாமலோ, சட்ட ரீதியிலான காரணங்களுக்காகவோ கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இந்த தினம் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் இலங்கையிலும் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் ஏராளமானவர்கள். இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்று கூட தெரியாமல் இன்று வரை தேடி வருகின்றனர் அவர்களது உறவினர்கள். இதற்காக நாள்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, மாதங்களைக் கடந்து வடக்கு மற்றும் கிழக்கில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் என பல முயற்சிகளை முன்னெடுத்த போதும் இவர்களுக்கு இன்று வரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. போராட்ட இடத்திற்கு வரும் அரசியல் தலைவர்களும், தமிழ் தலைமைகளும் தீர்வினை பெற்றுத் jருவதாக கூறி விட்டு சென்றாலும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுத்தபாடில்லை.
அந்த வகையில் இன்று முன்னெடுக்கப்படும் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட காணாமல் போனோர் தினத்தை இலங்கையில் பரவலாக செய்ய முடியாமல் கொரோணா வைரஷ் தாக்கத்தால் முடியாமல் உள்ளது.
ஆட்சிகள் மாறினாலும் வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை சர்வதேசத்தின் மூலமாகவும் நீதி பெறப்படாமல் தொடர்ச்சியான போராட்டங்களை எமது மக்கள் தினமும் செய்து கொண்டே உள்ளனர்.
கடந்த 2020, ஆகஷ்ட 30, வடக்கு கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் சர்வதேத்திற்கு நான்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.
பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாக மட்டுமே சாத்தியமாகும். எனவே தங்களது தலைமையில் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ நடத்துவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமேனவும் எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் கூட்டத்தொடருக்கு முன்மொழிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
1.சமர்ப்பிக்கும் அறிக்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் சாத்தியப்படுத்த அவசியமான அரசியல் விருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் 2019 கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை நீக்க வேண்டும் என்ற முன்மொழிவை தாங்கள் முன்மொழிய வேண்டும்.
2.இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தக்குற்றங்கள்,மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேண்டுமெனக் கோருகின்றோம்.
3.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஐ.நா குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.
4.இலங்கைக்கான விசேட ஐ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும்,வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேன்படுத்தவும்,உறுதுணையாகவும் இருக்க இருக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு- கிழக்கில் நிறுவ வேண்டும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு கோரிக்கை அனுப்பபட்டும் ஒருவருடம் கடந்து தற்போது 2021, ஆகஷ்ட் 30, ம் திகதி அடுத்த காணமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்றும் எந்த பதிலும் இன்றி கண்ணீருடன் எமது உறவுகள் உள்ளனர்,
எனவே இனியும் காலம் கடத்தாமல் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சரியான நீதி கிடைக்கவேண்டும் என்பதை மீண்டும் இன்றய நாளில் வலியுறுத்துவோம் எனவும் மேலும் கூறினார்.