2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் இரண்டாவது பதக்கத்தை துலான் கொடித்துவக்கு இன்று மாலை வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டியெறிதல் எஃப் 64 போட்டியில் 65.61 மீற்றர்கள் என்ற தனது சிறந்த வீசுதலுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இலங்கையின் சமிந்த சம்பத் 49.94 மீற்றர் வீசி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.
இந்தப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.
பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல்- F46 நிகழ்வில் இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத் இன்று ஒரு புதிய உலக சாதனையை நிறுவி தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் அல்லது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையர் பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
ஹேரத்தின் மூன்றாவது வீசுதலில் முந்தைய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையை முறியடித்தார். முன்னதாக, 2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியாவால் உலகசாதனை படைக்கப்பட்டிருந்தது.
அப்போது ஹேரத் வெண்கலப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் ஜஜாரியா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீ ற்றர் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.