பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று (29) காலை அனுமதிக்கப்பட்ட இருவர், உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
வல்வெட்டித்துறையை சேர்ந்த 79 வயதான மூதாட்டி சுகவீனமடைந்த நிலையில் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாது.
பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதான யுவதி 3 நாள் சுகவீனமடைந்த நிலையில் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1