கரட் கண்பார்வையை மேம்படுத்துவது போன்று கூந்தலின் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. கேரட்டில் விற்றமின் ஏ, கே, சி, பி6, பி1, பி3 மற்றும் பி2 உள்ளது. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தலாம். இது முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. கேரட் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எப்படி பயன்படுத்துவது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
கரட்டில் இருக்கும் விற்றமின் ஏ உச்சந்தலையை ஆரோக்கியமாக வலுவாக வைத்திருக்கிறது. இது முடி உதிர்தலை தடுக்க செய்யும். விற்றமின் ஏ குறைபாடு அரிதான மற்றும் உலர்ந்த கூந்தலுக்கு வழிவகுக்கிறது. அதேபோன்று அதிகப்படியான விற்றமின் ஏ முடி உதிர்தலை உண்டாக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது.
கரட் முடியை தடிமனாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இதில் உள்ள சத்துக்கள் உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். கேரட் எடுக்கும் போது அது நரைமுடியை தடுக்க செய்யலாம் என்றாலும் இது குறித்து ஆராய்ச்சிகள் இல்லை.
கரட், தயிர் மற்றும் வாழைப்பழம் முடி மாஸ்க்
கரட், தயிர் மற்றும் வாழைப்பழம் முடி மாஸ்க் உடைவதை தடுக்கலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். முடியை மென்மையாக நிர்வகிக்க செய்யும். இதில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களுக்கு இது காரணமாக இருக்கலாம்.
ஹேர் மாஸ்க் முறை
கரட்- 1
தயிர் – 2 டீஸ்பூன்
வாழைப்பழம் – 1
கரட் மற்றும் வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை தயிருடன் கலந்து நன்றாக ப்ளெண்டர் செய்யவும். இதை உச்சந்தலை தலைமுடி முழுவதும் தடவி ஷவர் கேப் அணிந்து கொள்ளவும். பிறகு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரம் ஒருமுறை இந்த வழக்கத்தை கடைப்பிடிக்கவும்.
கரட், வெங்காயம், எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய்
கரட் உடன் ஆலிவ் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தவதை தடுக்கிறது. வெங்கயாச்சாறு மயிர்க்கால்களுக்கு நல்லது. முடி உதிர்தலை தடுக்க போராடுகிறது. எலுமிச்சை சாறு விற்றமின் சி இது கொலாஜன் திறனை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது. எனினும் இது குறித்து இன்னும் ஆராய்ச்சி தேவை.
ஹேர் மாஸ்க் முறை
கரட் – 1
ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 3
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கரட் மற்றும் வெங்காயத்தை வெட்டி இரண்டையும் பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். இதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு இலேசான ஷாம்பு கொண்டு கழுவி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.
கரட், அவகேடோ மற்றும் தேன்
கரட் மற்றும் அவகேடோ இரண்டுமே விற்றமின்கள், புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை வழங்குகின்றன. இது உச்சந்தலையை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் தேன் முடிக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. முடி சீரமைப்பு பணிகளையும் செய்கிறது.
ஹேர் மாஸ்க் முறை
கரட் -1
அவகேடோ – பாதி பழம்
தேன் – 2 டீஸ்பூன்
கரட்டை துண்டுகளாக வெட்டுங்கள். இதனுடன் அவகேடோ பழம் பாதி எடுத்து பேஸ்டாக மாற்றவும். இந்த கலவையில் தேன் சேர்த்து கலந்து இந்த பேஸ்ட்டை தலைமுடியில் உச்சந்தலையில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதை செய்து வர வேண்டும்.