வாரம்தோரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் டிஆர்பி விபரங்கள் வெளியாகி வருகிறது. அதில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த வாரம், 14 ஆகஸ்ட் முதல் 20 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்திற்கான டிஆர்பி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் வழக்கம்போல சன் டிவி தான் ஒட்டுமொத்த டிஆர்பியில் முதலிடம் பிடித்து இருக்கிறது.
ஆனால் நிகழ்ச்சிகள் லிஸ்டில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் முதலிடம் பிடித்து உள்ளது. ரோஜா சீரியலை அது பின்னுக்கு தள்ளி இருக்கிறது. பாரதி கண்ணம்மாவுக்கு 10.4 புள்ளிகள் கிடைக்க, ரோஜாவுக்கு 10.25 புள்ளிகள் தான் கிடைத்து இருக்கிறது. இதன் மூலமாக பாராட்டி கண்ணம்மா முதலிடம் பெற்று இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாம் இடத்திலும், நான்காம் இடத்தில் கண்ணான கண்ணே சீரியலும் இருக்கின்றன. ஐந்தாம் இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது.