ஆப்பிள் நிறுவனத்தின் வோச் சீரிஸ் 7 மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வோச் சீரிஸ் 7 போன்ற தோற்றம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ட்விட்டரில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்வோச் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வோச் சீரிஸ் 7 மாடலின் நகல் என கூறப்படுகிறது. சந்தையில் வெளியாகும் முன்பே ஆப்பிள் சாதனத்தின் நகல் விற்பனைக்கு வந்துள்ளது.
சீன சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்வோச் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன கேட் ரென்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 தோற்றம் கொண்ட வாட்ச் சீனாவில் 350 முதல் 400 யுவான் விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1