26.4 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

பொடுகு நீங்க இதோ வீட்டு வைத்தியம்!

பொடுகு உண்மையில் மோசமான விஷயம்தான். அனைவரும் இதை மறுக்கவும் முடியாது. இது முடிவில்லாமல் தொடரும் நிலையும் கூட முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் உச்சந்தலை பொடுகு வறட்சியை அளிக்கிறதா அல்லது ஈரமான உச்சந்தலையால் உண்டானதா என்பது தான். ஏனெனில் வறட்சியான உச்சந்தலைக்கு செய்யும் எதுவுமே ஈரமான தலைபொடுகை போக்காது. உலர் பொடுகுக்கு சிகிச்சை என்பது வேறு உச்சந்தலை ஈர பொடுகு என்பது வேறு. முதலில் உங்கள் பொடுகுக்கு காரணம் என்ன என்பதை அறிந்து சிகிச்சை அளியுங்கள்.

ஈரமான பொடுகு என்றால் என்ன?

உச்சந்தலையின் அடியில் அமைந்துள்ள செபாசியஸ் சுரப்பிகள் இயற்கயாக எண்ணெய் சருமத்தை உற்பத்தி செய்யும் முதன்மை செயல்பாட்டுக்கு உதவுகின்றன. இந்த சருமம் தலைமுடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்து நீரிழப்பை தடுக்கிறது. இது ஃப்ரீஸை குறைக்கும் மற்றும் வயதான அறிகுறிகள் தோன்றுவதை தடுக்கும்.
செபாசியஸ் சுரப்பிகள் அதிகப்படியான அளவு சுரக்கும் போது சருமத்தில் பிரச்சினை தொடங்குகிறது. அதிகப்படியான சருமம் உச்சந்தலையில் உருவாக தொடங்கி அதில் ஒட்டும். இது அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை ஈர்க்கவும் ஒட்டவும் செய்யும். இது தான் பொடுகு உருவாக காரணமாகிறது.

இது உச்சந்தலையில் ஈரமான அடுக்கை உருவாக்குகிறது. இந்த வகை பொடுகு ஈரமான பொடுகு அல்லது எண்ணெய் பொடுகு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஈரபொடுகு விரட்ட என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

​சோற்று கற்றாழை

கற்றாழை ஆக்ஸிடேஸ், அமிலேஸ் மற்றும் கேடலேஸ் விற்றமின் பி, சி மற்றும் ஈ போன்ற சுத்திகரிப்பு என்சைம்களை கொண்டுள்ளது. இதில் க்ளைகோப்ரொட்டின்கள் உள்ளன. இவை வீக்கத்தை குறைத்து அரிப்பை தணிக்கும். இது இறந்த சரும செல்கள், எண்ணெய் தேக்கம் மற்றும் கொழுப்பு படிவுகளை அகற்றுவதன் மூலம் மயிர்க்கால்களை அடைத்து ஈர பொடுகை உண்டாக்கும்.

4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து உச்சந்தலையில் தடவி விடவும். பிறகு துண்டை வெந்நீரில் நனைத்து தலையில் சுற்றி விடவும். பிறகு 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கற்றாழை ஜெல்லை இலேசான ஷாம்பு கொண்டு நன்றாக சொரிந்தபடி வெளியேற்றவும். இதை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் பொடுகு நீங்கும்.

​ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிளி சீடர் வினிகர் என்பது ஈரப்பதமான பொடுகு மருந்து ஆகும். இதில் உள்ள அமிலத்தன்மை உங்கள் உச்சந்தலையில் பிஹெச் அளவை மாற்றுவதால் பொடுகு மற்றும் பூஞ்சை வளர்வதை தடுக்க செய்யும் கடினமாக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரை உச்சந்தலையில் மென்மையாக ஊற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடவும். பிறகு உலர வைத்து சீப்பு கொண்டு நன்றாக சிக்கில்லாமல் சீவினால் போதும். வாரம் ஒருமுறை இதை செய்து வரலாம்.

​எலுமிச்சை மற்றும் நெல்லி சாறு

எலுமிச்சை மற்றும் நெல்லி சாறு உச்சந்தலையில் ஈரமான பொடுகு மற்றும் எண்ணெயை அகற்ற சிறந்த தீர்வாக இருக்கும். எலுமிச்சையில் இருக்கும் டிட்ரிக் அமிலம் ஆண்டிமைக்ரோபியல் பண்பை ஒத்துள்ளது. இது ஈரமான பொடுகை உண்டாக்கும் பூஞ்சையிலிருந்து விடுபட செய்கிறது.

எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன் எடுத்து நெல்லிக்காய் சாறு சம அளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து எடுக்கவும். இதை பருத்தி காட்டனில் நனைத்து உச்சந்தலை முழுக்க தடவி எடுக்கவும். பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும். 30 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு அலச வேண்டும். வாரம் இரண்டு முறை இதை செய்து வந்தால் போதும்.

பேக்கிங் சோடா

ஈரமான பொடுகுக்கு சிகிச்சையளிப்பதற்கான வித்தியாசமான தேர்வு இது. உண்மையில் இது நன்றாக வேலை செய்யும். பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பேக்கிங் சோடா பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை கொல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

பேக்கிங் சோடா 3 டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்கி உச்சந்தலை முழுவதும் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இதை தண்ணீர் மற்றும் இலேசான ஷாம்புவுடன் கழுவி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் போதும். பொடுகு நீங்கும்.

​வெந்தயம்

வெந்தயம் முடி வளர்ச்சிக்கும் பளபளப்புக்கும் மட்டும் அல்ல. இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளன. இது ஈரமான பொடுகு நிலையை ஏற்படுத்தும் மற்றும் மோசமாக்கும் தொற்றுநோயை எதிர்த்து போராடுகின்றன.

2 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் மென்மையான பேஸ்ட் ஆக அரைத்து இதை உச்சந்தலை முழுவதும் தடவி 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். இதை இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இது பொடுகு தீவிரத்தை தடுத்து படிப்படியாக குறைக்க செய்யும்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment