வவுனியாவில் 17,270 குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு!

Date:

வவுனியா மாவட்டத்தில் 17,270 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வீடு வீடாகச் சென்று வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி அதனை பெறுவதற்கு 17,270 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இரு தினங்களில் அந்த கொடுப்பனவை வழங்கி முடிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த நிதியினை எமது உத்தியோகத்தர்கள் நேரடியாகவே வீடுகளிற்கு சென்று வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்