கூந்தலில் உள்ள செதில்கள் கவனிக்கும் வரை அல்லது அவை வெளியே உதிரும் வரை அரிப்பு அடங்காது. பொடுகை கையாள்வது எளிதாக இருக்கும். இதை சரியான முறையில் பராமரிக்கும் வரை பொடுகை வெளியேற்றுவது சிரமமாக இருக்கும். வெந்தயத்தை கொண்டு பொடுகை எப்படி வெளியேற்றுவது என்பதை பார்க்கலாம்.
வெந்தயம் பொடுகுக்கு நன்மை அளிக்குமா?
வெந்தய விதைகளின் ஆன் டி பக்றீரியல் பண்புகள் மற்றும் அதன் பூஞ்சை காளான் பண்புகளுடன் உச்சந்தலையில் இருக்கும் பூஞ்சைகளை அகற்ற செய்கிறது. பொடுகை வெளியேற்றுகிறது. வெந்தயம் புரதம், விற்றமின் சி, இரும்பு பொட்டாசியம், நிகோடினிக் அமிலம் மற்ரும் லெசித்தின் போன்றவற்றின் வளமான ஆதாரமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் கூந்தலுக்கு அளிக்கும் நன்மைகள் ஏராளமானவை. இது உச்சந்தலை செதில்களுக்கு எதிராக போராடும் போது பொடுகு வெளியேறுகிறது. வெந்தயத்தை பொடுகு நீக்க எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
வெந்தயம் உடன் நெல்லி பொடி
வெந்தய பொடி – 2 டீஸ்பூன்
நெல்லிபொடி – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 4 டீஸ்பூன்
பொடிகள் இரண்டையும் மென்மையாக ஆகும் வரை கலக்கி எடுக்கவும். இந்த கலவையை தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரத்தில் ஒருமுறையாவது இதை செய்து கொள்ளுங்கள். பொடுகு நீங்கும் வரை இதை செய்யலாம். நெல்லி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது எலுமிச்சை சாறுடன் இணைந்து உச்சந்தலையில் விற்றமின் சி ஏற்றுகிறது. இந்த பேக் பொடுகை கொல்ல உதவுகிறது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஹேர் பேக் போடுவதன் மூலம் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
வெந்தயம் உடன் தேங்காய் எண்ணெய்
வெந்தய விதைகள் – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெந்தயத்தை இரவில் தேங்காய் எண்ணெயில் ஊறவிடவும். காலையில் இந்த விதைகளை அரைத்து தேங்காய் எண்ணெயோடு அரைக்கவும். இந்த கலவையை கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் பிறகு கூந்தலை இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் வலுவான பக்றீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உச்சந்தலையை ஈரப்பதமாக மாற்றுகிறது. மேலும் அதன் ஊட்டச்சத்து கொழுப்பு அமிலங்களுடன் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெந்தய விதைகள் சூப்பர் மாய்சுரைசிங் ஆக செயல்படுகிறது.
வெந்தயம் உடன் தயிர்
வெந்தய விதைகள் – 2 டீஸ்பூன்
தயிர் – அரை கப்
வெந்தய விதைகளை அரை கப் தயிரில் ஊறவிடவும். காலையில் இந்த வெந்தய விதைகளை தயிரோடு அரைத்து பேஸ்ட் ஆக மாற்றவும். இதை கூந்தலில் தடவி உச்சந்தலை முழுக்க தடவி எடுக்கவும். 20 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். பிறகு தலைமுடியை உலர வைக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் வரை இதை செய்யலாம். தயிர் முடியை மென்மையாக மாற்றும் இது முடியின் அமைப்பை அதன் புரத உள்ளடக்கத்துடன் மேம்படுத்துகிறது. வெந்தயம் உச்சந்தலையை செதில்களாக சுத்தம் செய்கிறது. இது பொடுகை வெளியேற்றுவதோடு கூந்தலை ஈரப்பதமாக்கி பளபளப்பாகவும் வைத்திருக்க செய்கிறது.