விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ராஜா ராணி. அதில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் நடித்து வருகின்றனர். படித்து பட்டம் பெற்ற ஹீரோயினுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்கிறார் அண்ணன். புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகு தான் தெரிகிறது கணவர் சுத்தமாக படிக்காதவர், ஸ்வீட் கடை நடத்தி வருபவர் என்று. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் ஹீரோ நடத்தி வரும் ஸ்வீட் கடையில் பணியாற்றும் பையனாக நடித்து வருகிறார் குழந்தை நட்சத்திரம் சுசில் ஜோசப்.
நேற்று அவரது பிறந்தநாள். அதனால் நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி இருக்கின்றனர்.
அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் சுசில் ஜோசப், ‘நான் இதை எதிர்பார்க்கவே இல்லை’ என கூறி உள்ளார். அவர்களுக்கு நன்றியும் கூறி இருக்கிறார்.