பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி நடிகையான பரீனா ஆசாத் தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் நடிகை பரீனா ஆசாத். ஏராளமான ரசிகர்களை கொண்ட பரீனா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் அவர், தனது புகைப்படங்களை பகிர்ந்த போது எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர கிளம்பியது. இருந்தாலும் ஹேட்டர்ஸ்களை புறந்தள்ளி தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தனது காதல் கணவர் பற்றி பலமுறை கூறியுள்ள பரீனா இதுவரை அவருடன் எடுத்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதில்லை. இந்நிலையில் தனது புதிய போட்டோஷூட்டில் கணவருடன் ஜோடி சேர்ந்து கொண்டு எடுத்து கொண்ட புகைப்படத்தை பரீனா வெளியிட்டுள்ளார். பரீனாவின் கணவரை முதன்முதலில் பார்க்கும் ரசிகர்கள் ‘இப்பயாச்சும் இவர கண்ணுல காட்டுனீங்களே’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.