25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

யாழ் மாவட்டத்தில் இன்று 222 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் இன்று (27) பிசிஆர், அன்டிஜன் சோதனைகளில் 222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அன்டிஜன் சோதனைகளில் 186 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 36 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், கரவெட்டி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர்,மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர் என அன்டிஜன் சோதனைகளில் 186 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நோய் அறிகுறிகளுடனோ பிற காரணங்களிற்காகவோ வைத்தியசாலைக்கு சென்றவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

 

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த 36 பேருக்கு தொற்று உறுதியானது.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 3 பேர் (இதில் புன்னாலைகட்டுவனை சேர்ந்த 74 வயதான பெண், சங்கத்தானையில் வீட்டில் உயிரிழந்தார். அவருக்கும் தொற்று உறுதியானது), யாழ் போதனா வைத்தியசாலையில் 4 பேர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் 5 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பண்டத்தரிப்பு மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர், சங்கானை மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என 36 பேருக்கு தொற்று உறுதியானது.

இதன்படி, இன்று யாழ் மாவட்டத்தில் 222 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம்

east tamil

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

east tamil

Leave a Comment