இலங்கை

டெல்டா தொற்றிற்குள்ளான இளவயதினருக்கும் இருதயப் பாதிப்பை ஏற்படுத்தும்!

கொரோனா தொற்றிற்குள்ளானவர்கள்- டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தால்- எந்த நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமலே இருதய செயலிழப்பிற்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.

அவ்வாறான இருபது நோயாளர்களுக்கு கடந்த வாரங்களில் சத்திர சிகிச்சை மேற்கொண்டோம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை இருதய வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

கொவிட் டெல்டா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இருதய நோய்களுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதிகமானவர்கள் குறைந்த வயதினர்கள். பொதுவாக இருதய நோய்க்கு காரணமாக அமையும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ராேல், நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகாமல், இருதய நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

அதனால் இவ்வாறான இருதய நோய் அறிகுறிகள் யாருக்காவது வெளிப்பட்டால், அவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு அனுமதிப்பது நல்லது.

அத்துடன் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, இருதய நோய்க்கு ஆளாகும் நோயாளர்கள் தொடர்பில் விசேட ஆய்வொன்றை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழ் பல்கலையில் மேலும் இருவர் பேராசிரியர்களாக தரமுயர்வு!

Pagetamil

ஒற்றுமை முயற்சிக்கு தமிழ் அரசுக்கட்சி தயாரில்லையெனில் வற்புறுத்த மாட்டோம்: என்.சிறிகாந்தா!

Pagetamil

காதல் ஜோடியால் களேபரம்; ஊர் இரண்டு பட்டது: யாழில் இராணுவம் தலையிட்டு கட்டுப்படுத்தியது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!