ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்த ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் கடந்த ஜுன் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த தொடரில் இலங்கைத் தமிழர்களைப் பற்றி, விடுதலைப்புலிகளைப் பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழக அரசும், சில அரசியல் கட்சிகளும் இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், எதிர்ப்புகளை மீறி இந்த தொடர் வெளியானது.
இந்த சர்ச்சைகள் குறித்து எந்தவித கருத்தும் சொல்லாமல் இருந்த சமந்தா, சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
“மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் மதிக்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, அப்படி நடந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்”.
ஆனால், இந்த தொடர் வெளியான பிறகு பல சத்தங்கள் நின்றுவிட்டது. இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் பார்த்தேன் ”என்று கூறினார்.