தம்பதியருக்கு என்று பிரச்சினைகள் பலவும் உண்டு. இது பொதுவானது. அதே நேரம் திருமணம் முடிந்த நிலையில் ஒரு நபர் இன்னொருவருக்கு எதிரானவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினைகளை தம்பதியரில் ஒருவர் தனி நபராக நின்று தீர்க்க முடியாது. இருவரும் இணைந்தே அதை சரி செய்ய முயல வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சனை மீண்டும் மீண்டும் வரலாம். தோல்வி அடையலாம். உங்களுக்குள் மற்றவரது நபரின் ஆதரவும் தலையீடும் இல்லாமல் இருக்கும். அப்படி தம்பதியர் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் என்ன என்பதை பார்க்கலாம்.
பணம் ஒரு பிரச்சினை
இன்று கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். கணவன் மட்டுமே வேலைக்கு செல்பவராக இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். பண விஷயங்களில் வெளிப்படைதன்மை கொண்டிருப்பது இருவருக்குமே நிம்மதியான எதிர்கால வாழ்வை அமைத்து தரும். உங்கள் வரவு என்பதை தாண்டி நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் விஷயங்கள், சேமிப்பு, செலவு போன்றவற்றை மட்டுமே முன்வைக்க வேண்டாம் அதில் மற்றொன்றை முக்கியமாக சேருங்கள். தனிப்பட்ட செலவுக்கு வேண்டிய தொகை, வாரந்தோறும் செலவுகள் எப்படி இருக்கும், விருப்பமான விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் போன்றவற்றை பரஸ்பரம் இருவருமே பகிர்ந்து கொள்வது அவசியம். அதோடு பெரிய நிதியை எப்படி கையாள்வது என்ற ஆலோசனை தெளிவான பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். இது நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். மற்றவருக்கு என்ன தெரியும் என்று ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்டு செய்யும் எதுவுமே நம்பிக்கையின்மை எண்ணத்தை அதிகரித்துவிடும்.
தாம்பத்தியத்தில் வெளிப்படைப் பிரச்சினை
திருமணத்துக்கு பிறகு பாலியல் இன்பத்தில் மூழ்கி திளைக்க இருவருமே விரும்பினாலும் வெளிப்படையாக தங்கள் ஆசைகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்வார்கள். சில தம்பதியருக்கு பாலியல் வாழ்க்கை குறித்து அடிப்படை விஷயங்களே முழுமையாக தெரியாத நிலையில் தான் இருக்கும். ஒருவருக்கொருவர் பேசுவதே தயக்கமாக இருக்கும் போது பாலியல் குறித்த ஆர்வத்தை விருப்பத்தை வெளிப்படையாக பேச மாட்டார்கள். இது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். இதை தவிர்க்க முதலில் துணையின் ஆர்வத்தை புரிந்து கொள்வது முதன்மையான பலனை கொடுக்கும். பாலியம் மற்றும் நெருக்கம் முதலில் எப்படி இருந்தது. பிரச்சினையின் மூலம் என்ன என்பதை கவனித்து அதை சரி செய்தாலே தம்பதியர் நாளடைவில் தாம்பத்தியத்தில் புதிய அனுபவங்களை பெறுவார்கள். அதற்கு முதலில் மற்றவரது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் பல தம்பதியர் இந்த இடத்தில் நிதானம் தவறுவதால் தான் தாம்பத்தியத்தில் பிரச்சினை உண்டாகிறது.
பொறாமை உணர்வு தலைதூக்கலாம்
இருவரும் ஒருவருக்கொருவர் மறைமுகமான அன்பை மனதில் கொண்டிருந்தாலும் துணை மற்றொருவரிடம் பழகும் போது அதிக பொறாமை எண்ணம் தலைதூக்கும். உதாரணத்துக்கு மனைவி ஆண் உறவினர்களுடன் சிரித்து பேசும் போது, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் போது தன்னிடம் மட்டும் நெருக்கமாக இல்லையே என்னும் எண்ணம் பொறாமையில் வரலாம். அதே போன்று கணவன் உறவு பெண்களிடம் நகைச்சுவையாக பேசும் போது,தோழிகளிடம் நீண்ட நேரம் பேசும் போது தன்னிடம் நெருக்கமாக இல்லையே என்னும் எண்ணம் தோன்றலாம். இதற்கு தீர்வு உறவில் நெருக்கத்தை கடைப்பிடியுங்கள். தாம்பத்திய காலத்தில் மட்டும் அல்லாமல் இருவரும் தனித்திருக்கும் போதெல்லாம் நெருக்கமாகவே இருங்கள். இதன் மூலம் மற்றொருவர் அதிக நேரத்தை உங்களுடன் கொண்டிருக்கலாம். இதன் மூலம் திருப்தியான திருமண வாழ்க்கையை தம்பதியர் ஆரம்ப கட்டத்திலேயே பெற்றுவிடுவார்கள்.