வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

Date:

வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்