வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 31 பேருக்கு தொற்று!

Date:

வவுனியா, தோணிக்கல் பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு இன்று (26) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் (25.08) 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரால் பரவலாக எழுமாறான அன்டிஜன் பிரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தோணிக்கல் பகுதியில் எழுமாறாக 93 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் கர்ப்பிணிப்பெண் உள்ளடங்களாக உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 பேருக்குமாக 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...

கட்டிட ஒப்பந்ததாரரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் வாங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்