Pagetamil
லைவ் ஸ்டைல்

தாமரை விதைகளில் இத்தனை நன்மைகளா!

தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் இவை பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். அனைத்து மக்களாலும் பிரபலமாக உண்ணக்கூடிய ஒரு பொருள். பொதுவாக இது விரதத்தின் போது உட்கொள்ளப்படுகிறது. காலை சிற்றுண்டியாகவும் பிற நட்ஸ்களுடன் சேர்த்து உட்கொள்கிறார்கள்.

​தாமரை விதை

விரதத்தின் போது இந்த உணவு உட்கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணம், இதில் அதிக அளவில் ஆற்றல் ஆதாரமாக உள்ளது. இதனால் விரதத்தின் போது விரதம் இருப்பவர்கள் ஆற்றலுடன் இருக்க இது உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் உதவுகிறது, அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் .

​எடை இழப்பு

இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது.

​சிற்றுண்டி நேரத்தில்

இந்த உணவை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இந்த உணவை காலையில் அல்லது மதியம் என ஏதேனும் ஒரு வேளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

​ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

மக்கானாக்களில் பிளேவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது சரும ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.

​ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த

இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீடு என் உள்ளது. ஆரோக்கியமான இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

​எலும்பு ஆரோக்கியம்

இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது எழும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் ஆகும். எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டு பிரச்சினை போன்ற நிலைமைகளை சரிசெய்ய உங்கள் உணவில் நீங்கள் இந்த மக்கானாக்களை சேர்த்துக்கொள்ளலாம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment