25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

கணவன் – மனைவி உறவுக்கு இடையில் கவுன்சிலிங் எப்பொழுது பொருத்தமானது!

உறவுகளுக்குள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மையான உறவுகளாக இருந்தாலும் சில நேரங்களில் சிக்கலை எதிர்கொள்ளவே செய்கின்றன. எல்லா தம்பதியருமே ஏற்ற இறக்கத்தை சந்திப்பது இயல்பானது. இந்த நேரத்தில் நீங்கள் கவுன்சிலிங் பெறுவதன் மூலம் உங்கள் உறவு மலர்வதில் நல்ல தொடக்கமாக இருக்கலாம்.

தம்பதியர் ஆலோசனை என்றால் என்ன?

தம்பதியர் ஆலோசனை என்பது உறவில் தனிப்பட்ட மோதலை தீர்ப்பதற்கான ஒரு முயற்சி. இது பொதுவாக துணையின் மதிப்பீட்டை உள்ளடக்கும் முறை. தம்பதியரினிடையே நெருக்கத்தை உண்டாக்கும் செயல்முறையை தொடங்கும் நிலை. தம்பதியருக்குள் பச்சாதாபம் ஏற்படுத்துவது முதன்மையானது. இது ஆலோசனையின் முதல் பகுதி ஆகும். துணையின் மீது மற்றொருவருக்கு அன்பை தூண்டுவதே முக்கிய குறிக்கோளாக இருக்கும். இது கலாச்சார, குடும்ப அடிப்படையில் இருக்கும்.

ஆலோசனை செய்வது எப்படி?

தனிநபர்கள், தங்கள் சொந்த குடும்ப அமைப்பு மற்றும் அனுபவங்களை ஆராயத் தொடங்குகிறார்கள். மேலும் அவரது நடத்தைகள், சிந்தனை முறைகள் போன்ற குறித்தும் ஆராயத் தொடங்குவார்கள். குடும்பத்தில் அவர்களின் பங்கு மற்றும் உடன்பிறப்புகள் மற்றும் பெரியவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைகள், உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை, நடத்தை போன்ற உங்களை எப்படி மற்றவற்றுடன் காட்டபடுகிறது என்பதை ஆராய்ந்து அதை உங்களுக்கு காட்டவும். தனிப்பட்ட ஒவ்வொருவரின் எண்ணங்களும், மனநிலையும் மதிப்பீடு செய்யப்படுவதன் மூலம் தகவல் தொடர்பு மற்றவர் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்தப்படும். எந்த நேர்மறையான உறவுக்கும் இது முக்கியமானதும் கூட. தனி நபரின் கவலை, தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மேலதிக தகவல்களை மேம்படுத்துதல் வாதங்கள் அல்லது சிக்கல் அறிகுறிகள் போன்ற இந்த ஆலோசனை மூலம் தீர்க்கப்படுகிறது.

எப்போது ஆலோசனையை நாட வேண்டும்

உறவுகளில் பிரச்சினை எனும் போது ஆலோசனையை தயக்கமில்லாமல் நாடலாம். தம்பதியர் மோதலின் விளைவாக கவலை அல்லது மனச்சோர்வு அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடும். பாலியல் அல்லது உணர்ச்சி ரீதியான நெருக்கம், அடிக்கடி வாக்குவாதம் போன்ற உறவுகளை மேலும் மோசமான பாதைக்கு அழைத்து செல்லலாம். இவை மேலும் வலுக்காமல் இருக்க ஆலோசனையை நாடுவது உறவை மேன்மேலும் நெருக்கமாக்க கூடும். புதிய அனுபவத்தை போன்றே அறியப்படாத அனுபவம் குறித்து பேசுவதை நீங்கள் தயக்கமாக உணரலாம். எனினும் ஆலோசனையின் முதல் மற்றும் இரண்டு ஆலோசனைகளுக்குப் பிறகு உங்கள் உறவை நல்லுறவாக்கச் செய்யும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

Leave a Comment