பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் சிறிது காலத்திற்கு படங்களில் நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறார் என்ற ஒரு தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது அதுகுறித்து முழு தகவலும் தெரிய வந்துள்ளது.
அபிஷேக் பச்சன் நடிப்பில் தற்போது ‘தேஸ்வி’ என்கிற படம் உருவாகிறது. இந்தப்படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தற்போது மேஜர் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அபிஷேக் பச்சனை சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1