சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.56 இன்ச் புல் ஸ்கிரீன் ஆமோலெட் டச் டிஸ்ப்ளே, 30-க்கும் அதிக உடற்பயிற்சி மோட்கள், இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஒ.2 சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்டிரெஸ் மாணிட்டரிங், டீப் பிரீத்திங் கைடன்ஸ், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 125 எம்.ஏ.ஹெச். பட்றி வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பட்றி14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் இதில் சார்ஜிங் கனெக்டர் உள்ளது.