24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இந்தியா

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம்!

தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளம்ஜோடி, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் புழுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகா (19). தர்மபுரி அரசு கல்லூரியில் பிசிஏ 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர், கல்லூரியில் உடன் பன்னீர் செல்வம்(21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், மகாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் வேறு நபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்த மகா, வீட்டில் இருந்து வெளியேறி கடந்த 20ஆம் தேதி கொல்லாபுரியம்மன் கோவிலில் பன்னீர்செல்வத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், திருமணத்திற்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், தங்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நேற்று மகா, கணவர் பன்னீர்செல்வம் தர்மபுரி பி1 காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதனை அடுத்து, அவர்களது புகாரின் பேரில் போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

Leave a Comment