வவுனியாவில் இந்த வருடம் 49 மரணங்கள்!

Date:

வவுனியாவில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனாதொற்றால் மரணமடைந்துள்ளதுடன் 3585 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார். தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் கொவிட் சமகால நிலமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

கொரோனா தொற்றுநோய் தொடர்பாக இன்றையதினம் ஆராயப்பட்டது. அந்தவகையில் 28தரப்பினருக்கு ஊரடங்கு காலப்பகுதியில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்குமேற்ப்பட்ட 5500 பேர் இதுவரை கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களிற்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அத்துடன் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி அதனை பெறுவதற்கு 17270 தகுதிபெற்றுள்ளனர். அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இருதினங்களில் அந்த கொடுப்பனவை வழங்கிமுடிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தநிதியினை எமது உத்தியோகத்தர்கள் மூலம் நேரடியாகவே வீடுகளிற்கு சென்று வழங்குவார்கள்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 2021 ஆம்ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3585 பேர் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 30 வயதிற்குட்பட்ட மேற்ப்பட்ட 96 ஆயிரம் பேரில் 82 சதவீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிற்கான இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான திட்டம் அடுத்த கிழமையில் இருந்து ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எமது மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளின் விபரங்கள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது கிடைக்கப் பெற்றதும் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் திட்டம் மாவட்டத்திலே ஆரம்பிக்கப்படும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புத்தரப்பினர், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி ஆரம்பம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு...

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்