சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நாயகனாக நடித்துள்ளார் செல்வராகவன். படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் படம் வெளியாவதற்கு முன்பே தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் செல்வராகவன். இந்த நிலையில் அடுத்தடுத்து செல்வராகவனை தங்கள் படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பீஸ்ட் படத்தில் நடிக்க செல்வராகவனுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சோசல் மீடியாவில் செய்தி வெளியீடு உள்ளது.