27.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளிற்காக வாழ்நாள் முழுவதும் வாதாடினார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியார் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசவின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினரின் துயரில் பங்குபெறுவதோடு அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், உதயன் குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்காக வாழ்நாள் முழுவதும் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி என மறைந்த பெருந்தகை போற்றப்படுகிறார். சவால்மிக்க பல வழக்குகளை எதிர்கொண்டவர். அவர் புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்ல ஒரு தலைசிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளருமாவர். அத்துடன் தமிழ் தேசியத்தின்பால் அதீத பற்றுக் கொண்டவர்.

1983க்குப் பின்னரான காலகட்டத்தில் எதுவித குற்றமும் அறியாத பல தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது தன்னலம் கருதாது தாமாக முன்வந்து பல தமிழ் இளைஞர்களை காப்பாற்றியவர். பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளில் சட்டத்தரணிகள் முன்னிலையாக பயந்த சமயத்தில் துணிச்சலாக களமிறங்கி பலரின் விடுதலையை சாத்தியமாக்கியதுடன் தொடர்ந்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் காரணமாயிருந்தார். நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தவர்.

அது மட்டுமல்ல எமது நிறுவனம் சட்ட ரீதியாக எதிர்நோக்கிய பல சாவல்களுக்கு முகம் கொடுக்க சட்டத்தரணி தவராசா தம்பதிகள் தமது பலமான சட்ட உதவிகளைச் செய்ததோடு நீதிமன்றங்களில் தோன்றி அவற்றிலிருந்து நிறுவனம் விடுபட உதவினர். அத்துடன் கடந்த கார்த்திகைத் திங்களில் எமது உதயன் நிறுவனம் எதிர்கொண்ட வழக்கை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் காரணமாயிருந்தவர்கள் சட்டத்தரணி தவராசா தம்பதிகள்.

இந்தநிலையில், சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அன்னார் நேற்று மாலை காலமானதாக அறிந்தேன்.

அமரர் கௌரிசங்கரி தவராசாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். – என்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிசாம் காரியப்பர் எம்.பியாக பதவிப்பிரமாணம்!

Pagetamil

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

Pagetamil

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

காதலன் மீது சந்தேகம்: புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்த இலங்கை ரிக்ரொக் பிரபலம்!

Pagetamil

Leave a Comment