‘ஹீரோவாகும் ஆசை இல்லை’ புகழின் அதிரடிப் பதில்

Date:

குக் வித் கோமாளி பிரபலமான நடிகர் புகழ் தற்போது அதிகமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமேசான் ப்ரைமுக்காக அவர் நடித்த ளொள்ளு என்ற சீரியஸின் புரோமோஷனுக்கான பத்திரிக்கை சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், புகழ், பவர்ஸ்டார் மற்றும் ஆர்த்தி கணேஷ் கலந்து கொண்டனர். அப்போது புகழிடம் உங்களுக்கு ஹீரோவாகும் ஆசை இருக்கிறதா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த புகழ், ‘ஹீரோவாகும் ஆசையெல்லாம் இல்லை. ஒரு காமெடியனாக இருந்து மக்களை எந்த அளவுக்கு சிரிக்க வைக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம். ஆனால், ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்பட்டால் யாரு வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம். கதை தான் முக்கியம் அந்த கதையில் நாம் என்ன கருவாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். கதநாயாகனாக இருப்பது முக்கியமல்ல’ என அவர் கூறியுள்ளார். புகழ் தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதை பற்றி கேட்ட போது சம்மந்தப்பட்ட படக்குழுவினர் அதை சர்ப்ரைஸாக வெளியிடுவார்கள் என கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்