போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதன் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு கொண்ட கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, 4 மாத சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் இருந்து வெளியேறினார்.
இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிந்து, தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர்கள் இருவர் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1