27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
சினிமா

அசல் வையாபுரிதான்: பிரியா வாரியரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்றாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் உள்ளது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்தது.

இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே உதட்டு முத்த காட்சியில் நடித்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா நடித்த நீச்சல் உடையிலும், மது அருந்தும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சில நாட்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட முடக்கிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இன்ஸ்டாவில் இணைந்த பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இவரை லேடி கெட்டப் போட்ட பிரசாந்த், வையாபுரியின் புகைப்படங்களை போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment