தென்மராட்சியில் இன்று (24) கொரோனா தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயதான கொடிகாமத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவர், கொடிகாமம் நகரத்தில் தையல் கடை நடத்தி வந்தவர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று இரண்டு மரணங்கள் பதிவாகின.
அல்லாரை பகுதியை சேர்ந்த 83 வயதான முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அல்லாரை பகுதியை சேர்ந்த 75 வயதான முதியவர் சாவச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1