திருமணம் முடிந்த 7 வது வருடத்தில் அதிக தம்பதியர் பிரிந்துவிடுகிறார்கள், அதற்கு காரணம் இதுதானாம்!
திருமணத்திற்கு பிறகு எவ்வளவு அந்நியோன்யமான தம்பதியராக இருந்தாலும் ஏழாம் ஆண்டு மோசமான உறவு சிக்கலை எதிர்கொள்வார்கள். செவன் இயர் இட்ச் என்று அழைக்க கூடிய இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு இந்த கட்டுரை உதவ முடியும்.
செவன் இயர் இட்ச் என்றால் என்ன?
கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இருவரில் ஒருவருக்கேனும் இந்த உறவு இனி நீடிக்க வேண்டாம் அல்லது வேறு ஒரு உறவைத் தேடலாம் என்ற எண்ணம் வரும். இது செவன் இயர் இட்ச் என்று அழைக்கப்படுகிறது. திருமணம் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாக இருந்தாலும் காதல் திருமணமாக இருந்தாலும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வது பொதுவானது தான். இது கணவர் என்னை பாராட்டவில்லை, மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை என்ற சிறு விஷயம் தொடங்கி தாம்பத்தியம் வரை பல பிரச்சனைகளால் உண்டாகலாம். பல தம்பதியர் திருமணம் முடிந்து ஏழாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் போது இந்நிலை குறித்து வருத்தப்படும் அளவு இது குறித்து விழிப்புணர்வை பெறுகிறது. உண்மையில் தம்பதியர் இந்த செவன் இயட் இட்ச் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஏழு ஆண்டுகளில் வரக்கூடிய செவன் இயர் இட்ச்
திருமணத்துக்குப் பிறகு ஏழு வருடங்களில் பிரச்சனை வருவது குறித்து புள்ளி விவரங்களும் ஒப்புகொள்கின்றன. தேசிய புள்ளியியல் மையத்தின் தற்போதைய புள்ளிவிவரங்களின் படி 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற தம்பதிகளில் சராசரி திருமண காலம் 7. 2 ஆண்டுகள் ஆகும். காதலில் துரதிஷ்டமான எண் ஏழு என்று சொல்லலாம். ஏழு வருடங்களில் விவாகாரத்து விகிதங்கள் அதிகம் என்பது கூட பொதுவானவையே. காரணமாக திருமண மகிழ்ச்சி, ஈர்ப்பு, காதல் போன்றவற்றால் உடலில் இருந்து வெளிப்பட்ட ஆக்ஸிடாஸின் என்ற காதல் ஹார்மோன் படிப்படியாக குறைவதே இதற்கு காரணம். இவை ஏழாம் ஆண்டுகளில் மட்டும் தான் வரக்கூடுமா, மற்ற வயதில் இவை வரதா என்று கேட்கலாம்.
ஏன் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு
திருமண ஆனந்தம் பொதுவாக ஏழு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு வியத்தகு வகையில் குறையலாம். சில தம்பதியருக்கு திருமணத்திற்கு பிந்தைய இரவுகள் மகிழ்ச்சியாக சில வருடங்களுக்குப் பிறகு இதில் அதிருப்தியாக தொடங்கலாம். அதிக தம்பதியருக்கு ஏழாம் ஆண்டு இந்த ஈடுபாடு குறைதல், கருத்து வேறுபாடு, சலிப்பு போன்ற தோன்றினாலும் அரிதாக சிலருக்கு 49 ஆண்டுகள் கழித்தும் தோன்றலாம். விகிதத்திற்காக ஏழு வருட உறவில் சிக்கலை எதிர்கொள்பவர்கள் பலரும் உள்ளனர்.
செவன் இயர் இட்ச் காரணங்கள் என்ன?
மன நிறைவு குறைவது தான் இதற்கு முக்கியமான காரணம். ஆரம்ப காலத்தில் உடலும் உள்ளமும் மகிழ்ச்சியாக ஒன்றிணையும் போது இருவருக்குள்ளும் பாராட்டும், தவறை மன்னிக்கும் குணமும் பெரிதும் தலைதூக்கும். நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை குறைத்துக்கொள்ளும் போது மற்றவர்களுக்கு நம் மீது ஆர்வம் இல்லையென்றால் எண்ணம் தலைதூக்கும். அப்போது துணை செய்யும் சிறு தவறுகளும் கூட மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டலாம். அப்போது உச்சகட்டமாக அவர்கள் பிரிதலை விரும்புகிறார்கள். இது சலிப்பு, விரக்தியால் உண்டாகும் ஒரு நிலை. நாளடைவில் இருவருக்குள்ளும் தாம்பத்திய வாழ்க்கையும் விலகும் போது இருவருக்குமான தொடர்பு குறைவதோடு அவர்கள் பாதையிலிருந்து விலகி விவாகரத்தை அல்லது பிரிவை விரும்புகிறார்கள்.
செவன் இயர் இட்ச் அறிகுறிகள் உண்டா?
அதற்கான அறிகுறிகளாக சொல்லப்படுவது அதிருதி, சலிப்பு, எரிச்சல் மற்றும் மனக்கசப்பு போன்ற இந்த செவன் இயர் இட்ச்- க்கான அறிகுறிகள் ஆகும். இதுவரை மனைவியின் சிறு தவறையும் அலட்சியத்தையும் பொருட்படுத்தாத கணவன் எப்போதும் மனைவியின் அருகாமையை மட்டும் விரும்பிய கணவன் இனி மனைவி தன்னை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்ட கூடும். முன்பு உங்கள் மனைவியிடம் பிடித்த ஈர்த்த விஷயங்கள் இப்போது பிடிக்காமல் போகலாம். இதே போன்று எதிர்துணைக்கும் உண்டாகலாம். இந்த அறிகுறிகள் எல்லாமே உங்கள் துணை உங்கள் மீது வெறுப்பில் இருப்பதை காட்டுகிறது. இதனால் அவர் பேசும் போதும் குரலில் அந்த தொனி மாறுகிறது. அவர்கள் பொறுமை இழக்கிறார்கள். நீங்கள் ஆதரவாக நெருங்கினாலும் உடலில் சலிப்பு சற்றும் குறையாமல் இருக்கும். உங்கள் மீதான அலட்சியம் சற்றும் குறையாமல் இருக்கும். இதற்கு நேர்மாறாக சிலர் அமைதியை கடைபிடிப்பார்கள். இந்த அறிகுறிகள் இரு தரப்பினருக்கும் பொருந்தும்.
எல்லா தம்பதியருக்கும் வருமா?
உண்மையில் ஒவ்வொரு தம்பதியரும் ஒவ்வொரு அரிப்பை எதிர்கொள்வார்கள். சமயங்களில் இது ஒரு தலைப்பட்சமாக இருக்கலாம். காரணமாக இருவர் இணைந்த ஒரு உறவில் ஒருவர் அதிருப்தி அடைவது சாதாரணமானது அல்ல. ஒருவரது மகிழ்ச்சியால் இன்னொருவரும் மகிழ்ச்சி பெறும் போது அந்த தம்பதியர் காலத்துக்கும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். எனினும் இந்த பக்குவம் குறைவாகவே வருகிறது.
செவன் இயர் இட்ச் சிகிச்சை உண்டா
இதற்கு சிகிச்சை உண்டு. அதே நேரம் இவை உண்டாகாமல் தடுக்கவும் முடியும். உங்கள் துணைக்காக நேரம் செலவிடுங்கள். யோகா, நீண்ட பயணம் சில மணி நேரம் துணையுடன் நேரம் செலவிடுவது என எல்லாமே உங்கள் குழப்பமான மனநிலையை தெளிவுபடுத்த உதவும். ஏழு வருட அரிப்பு பிரச்சனையை துண்டித்து தான் தீர்வு காண வேண்டுமென்பதில்லை. இது காதல் பரிணாமத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கலாம். காதல் மற்றும் டேட்டிங் குறித்து உங்கள் ஈர்ப்பு குறைவாக இருக்கும் இந்த காலகட்டம் சாதாரணமானது என்பதால் உணர்வுகளை தவிர்க்க வேண்டும் என்பதல்ல. இது தற்காலிகமானது. ஆனால் இவையே தொடர்ந்து தீவிரமாகும் போது அது நடந்தால் பிரச்சனைகள் மேலும் பாதிக்கலாம். அப்போது சிகிச்சை அளிப்பது கடினமாகும். எப்போதாவது உங்கள் குழப்பத்தை, சலிப்பை யோசித்து தெளிவு படுத்தி கொள்வது உங்கள் உறவில் வளர்ச்சியை மேம்படுத்தும்.