Pagetamil
சினிமா

அந்தரத்தில் பறந்து அசத்தும் நம்ம பிரீத் சிங்

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங் .அவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர் அவரது யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் மிகவும் பிரபலம். இந்த நிலையில் யோகா பயிற்சியிலேயே ஏரியல் யோகா என்கிற புதுவிதமான பயிற்சியை செய்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இவர் ஏரியல் யோகா செய்யும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின.

இந்த ஏரியல் யோகா என்பது கிட்டத்தட்ட ஒரு நீண்ட துணியின் உதவியால் தரையை தொடாமல் சற்று உயரத்தில் அந்தரத்தில் பறப்பது போன்ற ஒருவித பயிற்சி ஆகும். அடிப்படை யோகா பயிற்சிகளில் கரை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இந்த ஏரியல் யோகா எளிதில் கைவந்துவிடும் என்கிறார் ராகுல் பிரீத் சிங்கின் யோகா பயிற்சியாளர் அனுஷ்கா.

இந்த ஏரியல் யோகா குறித்து ராகுல் பிரீத் சிங் கூறும்போது, ​​“ஆரோக்கியமான பயிற்சிகள் செய்யும்போது ஆரோக்கியமான உடல்நலத்தின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது. எனக்கு உடற்பயிற்சி என்பது வெறும் உடல்ரீதியானது மட்டுமல்ல, மன ரீதியான மற்றும் உணர்வு ரீதியானதும் கூட. என்னதான் உங்கள் உடல் நிலையை வெளிப்புற காரணிகள் தீர்மானித்தாலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். முன்னெப்போதையும் விட இப்போது தான் உடல் நலத்துடன் இருக்க வேண்டியது அவசியம் .. இதுவரை ஆரம்பிக்காவிட்டால் உடனே ஆரம்பியுங்கள் ”என கூறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment