கருத்தரிப்பதில் சிக்கலா? வீட்டு வைத்தியம் இதோ!

Date:

கருவுறுதலை எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதியர் சில குறிப்பிட்ட மாதங்கள் வரை காத்திருந்தும் கருவுறுதலை எதிர்கொள்ளவில்லையெனில் உடல் கர்ப்பமாக தேவையானதை பெறவில்லை என்று நினைக்கலாம்.
தேவையான சப்ளிமெண்ட்கள் இனப்பெருக்க அமைப்புக்கு தேவையான கூடுதல் ஊக்கத்தை அளிக்கலாம். கருவுறுதலை ஆதரிக்கும் இயற்கை மருந்துகளை பார்ப்போம்.

கர்ப்பமாக இருப்பதற்கு பிசிஓஎஸ் தடையாக இருந்தால் இந்த மருந்து உங்களுக்கு உதவலாம். மியோ ஐனோசிட்டால் என்பது கார்போசைக்கிளிக் சர்க்கரையாகும். இது நம் உடலில் குளுக்கோஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீங்கள் இந்த பொருளை சேர்க்கும் போது அது இன்சுலின் மீதான உணர்திறனை அதிகரிக்கிறது. இது கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கும். இது கருவுறுதலை அதிகரிக்கலாம்.

பாரா அமினோபென்சோயிக்

பாரா அமினோபென்சோயிக் அமிலம் என்பது விற்றமின் பி 10 இற்கான மற்றொரு பெயர். பாரா கருவுறுதலை ஊக்குவிப்பதில் நீண்டகால பயன்பாட்டை கொண்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில் 3- 7 மாதங்களுக்கு தினமும் பாரா எடுத்துகொண்ட 75% பங்கேற்பாளர்கள் கருவுற்றார்கள். பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர்கள் பாரா மற்றும் கருவுறுதலில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் கருவுறுதலை பொறுத்த வரை இது நம்பிக்கைகுரிய மருந்தாகவே செயல்படுகிறது.

​பெர்ரி சாறு

பெர்ரி சாறு. சமீபத்திய ஆண்டுகளில் கடைசியாக கவனத்தை ஈர்த்த மூலிகை ஆகும். இந்த பெர்ரி சாறு வைடெக்ஸ், டோபமைன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் உற்பத்தியை சமப்படுத்த உதவும். லூட்டல் கட்ட குறைபாடுகளால மலட்டுத்தன்மை கொண்ட நோயாளிகள் அடங்கிய சோதனையில் மேம்பட்ட கருவுறுதல் உறுதிப்படுத்தப்பட்டது. 40 .மி.கிராம் உலர்ந்த வைடெக்ஸ் அக்னஸ் காஸ்டஸ் சீரம், புரோஜெஸ்ட்ரான் மற்றும் எஸ்ட்ரியோல் அதிகரித்தது. இந்த சிகிச்சையை தொடர்ந்து அண்டவிடுப்பின் 93% இருந்தன. மற்றும் 71.4% நோயாளிகளுக்கு கருவுறுதல் விகிதம் மீட்டெடுக்கப்பட்டது.

​அஸ்வகந்தா சாறு

அஸ்வகந்தா. மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியை குறைத்து நாளமில்லா மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும். இது கருவுறாமைக்கு சிகிச்சையளிப்பதில் பெரிதும் உதவக்கூடும். கருச்சிதைவை தடுப்பதற்கு, மன ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் நீண்ட கால நன்மைகளை உண்டாக்குகிறது. கருவுறுதல் மேம்படுத்துவதில் மன அழுத்தம் தடையிடக்கூடும் என்பதால் அஸ்வகந்தா மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கருவுறுதலையும் மேம்படுத்துகிறது.

​சதாவரி வேர் சாறு

இது அஸ்பாரகஸ் இனத்திலிருந்து வருகிறது. இது ஆன் டி ஆக்ஸிடண்ட் ஆகும். மன அழுத்தத்தை சமாளிக்க இவை உதவுகிறது. இந்த ஆராய்ச்சியின் படி ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், ஃபோலிகுலர் வளர்ச்சி, தரம் மற்றும் கருவுறாமை உள்ளிட்ட பெண்களின் இனப்பெருக்க சிக்கல்களை குணப்படுத்தி கருவுறுதலை மேம்படுத்த சதாவரி உதவும்.

​நெட்டில் வேர் சாறு

தொட்டால் எரிச்சல் ஊட்டுகின்ற மூலிகை. இது சிறுகாஞ்சொறி என்று அழைக்கப்படுகிறது. பல பயன்களை கொண்டுள்ள இது கருவுறுதல் மற்றும் பிரசவத்தை ஆதரிக்க உதவும். சில இடங்களில் இது மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கவும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

​விற்றமின் டி

ஒவ்வொரு நாளும் வெயிலில் அதிக நேரம் செலவிட வேண்டும். குறைந்தது வைட்டமின் டி உடல் அளவில் பெறும் அளவுக்கேனும் வெயில் பட வேண்டும். கருவுறுதலை ஆதரிக்க விற்றமின் டி பங்கு வகிக்கிறது. மதிப்பாய்வின்படி விற்றமின் டி அளவுகள் 30 ng /mL அளவு மேம்பட்ட கருவுறுதல் விளைவுகளுக்கு சான்றளிக்கிறது.

ஃபோலேட்

ஃபோலேட், விற்றமின் ஏ, விற்றமின் கே, விற்றமின் ஏ, விற்றமின் பி 9 கரு வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு முக்கியமானது. இந்த ஆய்வின்படி ஃபோலேட் வளர்சிதை மாற்றத்தில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தொடர்புடைய மரபணு மாறுபாடுகள், பெண் கருவுறுதல் மற்றும் உள்வைப்பு, சுகப்பிரசவம் போன்ற வாய்ப்பை பாதிக்க செய்யலாம்.
கருச்சிதைவுகளின் வரலாறை கொண்ட பெண்களுக்கு ஃபோலேட், புரோஜெஸ்ட்ரான், ப்ரெட்னிசோன் மற்றும் ஆஸ்ப்ரின் கொண்ட கூட்டு சிகிச்சையின் விளைவுகளை பார்க்கும் ஆய்வில் ஐஆர்எம் கொண்ட பெண்களில் எந்த சிகிச்சையும் இல்லாதை விட நேரடி பிறப்பு விகிதம் தொடர்பு கொண்டது.

கருவுறுதலுக்கு இந்த இயற்கையான மருந்துகள் மூலம் விரைவில் கருவுறுதலை எதிர்கொள்ளலாம். கருச்சிதைவு இருக்கும் போது இந்த மூலிகைகள் ஊக்கமளிக்கும். கருத்தரிப்பில் சிக்கலை எதிர்கொண்ட பெண்க தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்த பிறகு வெற்றி பெற அதிக வாய்ப்புண்டு.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்