வீடுகளில் சிகிச்சையளிக்கும் திட்டத்தில் தற்போது 9,606 நோயாளிகள்!

Date:

தீவிர அறிகுறிகளை வெளிப்படுத்தாத  COVID-19 நோயாளிகளை வீடுகளில் வைத்து கண்காணிக்க தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், 9,606 நபர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன ஊடக சந்திப்பில் பேசுகையில், கொழும்பு மாவட்டத்தில் 3,162 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1,883 பேரும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 1,712 பேரும் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்ட 26,173 நபர்கள் குணமடைந்து தற்போது தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

பொது சுகாதார ஆய்வாளர்கள் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தீர்மானங்களைத் தொடர்ந்து தனிநபர்கள் இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார், மேலும் ஒரு கோவிட் நேர்மறை நோயாளியின் அறிகுறிகள், வீட்டில் வாழ்க்கை நிலைமைகள், பராமரிப்பாளர்கள் மற்றும் தொலைபேசி வசதிகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

வீட்டு பராமரிப்பு திட்டத்திற்கு தகுதியான நபர்கள் குறித்த பரிந்துரைகளைப் பெற பொதுமக்கள் 1390 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

தொலைபேசி ஊாடாக பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று அவர் கூறினார், அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள 1390 ஹொட்லைன் நிறுவப்பட்டுள்ளது.

இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்கள், 65 வயதிற்குட்பட்டவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் உள்ளிட்ட சில பிரிவுகளின் அடிப்படையில் நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாக கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்