மொரட்டுவ, எகொட உயன பொலிஸ் வீதித்தடையில் பொலிஸாரிடம் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் நான்கு ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்க முயன்ற ஒரு இராணுவ சார்ஜன்ட் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
தனிமைப்படுத்தல் சுகாதார விதிகளை மீறி முச்சக்கர வண்டியில் வந்தவர், பொலிஸ் சோதனைச்சாவடியை தவிர்ப்பதற்காக, முச்சக்கர வண்டியிருந்து இறங்கி, சோதனைச் சாவடியை நடந்து செல்ல முற்பட்டுள்ளார்.
சந்தேகமடைந்த பொலிசார் அவரை பரிசோதிக்க முற்பட்ட போது, 4 பக்கெட் ஹெரோயினை உட்கொண்டுள்ளார். எனினும், அதை பொலிசார் முறியடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடங்கொட பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றுபவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1