தடுப்பூசி பயத்தை போக்க களமிறங்கும் சுப்பர் ஹீரோ!

Date:

COVID-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை வீழ்த்தத் தயாராகிவிட்டார் ஒரு புதிய ‘சூப்பர் ஹீரோ’.

மஞ்சள் நிறக் தொப்பியை அணிந்தவாறு கப்டன் எம்பதி (Empathy), அதாவது பரிவு, அறிவியலுடன் கொரோனாத் தொற்றை எதிர்த்துப் போராடுகிறார்.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இளையர்களுக்குக் கற்பிப்பதற்காக, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மேடை ஏறுகிறார் கப்டன் எம்பதி.இது ஒரு மேடை நாடகமாகும்.

நாடகத்தில், இரு இளையர்களைத் தடுப்பூசி போடச் செய்வதன் மூலம் சூப்பர் ஹீரோ வைரஸ் தொற்றை வீழ்த்துவதாக நாடகம் அமைந்துள்ளது.

தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களால், பலரும் அதைப் போட்டுக்கொள்ளத் தயங்குவதாக நாடகத்தின் இயக்குநர் கூறினார். அவர்களின் எண்ணத்தை மாற்றும் சமூக முயற்சியே அந்த நாடகம் என்று அவர் சொன்னார்.

அமெரிக்காவில் இதுவரை 51 வீதமானவர்கள் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்