Pagetamil
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி மழையால் ரத்து

வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்தது.

கேப்டன் பாபர் ஆசம் 75 ரன் எடுத்தார். பவாத் ஆலம் 76 ரன் எடுத்திருந்தபோது காயத்தால் வெளியேறினார். பஹீம் அஸ்ரப் 23 ரன்னும் , முகமது ரிஸ்வான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. மழை மற்றும் ஆடுகள ஈரப்பதம் காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!