தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடனான தனது உரையாடலின்போது தனது வாழ்க்கையில் தான் புதிய தளத்திற்குள் அடியெடுத்து வைக்கப்போவதாக கூறிவந்தார். அந்தவகையில் ஒரு தொழிலதிபராக மாறி தற்போது புதிய முகம் காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஆம்.. சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதனா பொருட்களை தயாரிக்கும் பூமித்ரா என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த அழகு சாதன பொருட்கள் எல்லாமே ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்படுகின்றனவாம். இதை விளம்பரப்படுத்துவதற்கும் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கும் என்றே தனியாக இணையதளம் ஒன்றையும் துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1