முன்னணி கதாநாயகர்கள் சமீப காலமாக ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இமேஜ் பார்க்காமல் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். இது சினிமா துறையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனும், சூர்யாவும் பிரபல மலையாள இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அமல் நீரத் அளித்துள்ள பேட்டியில், “கமல்ஹாசனையும், சூர்யாவையும் மனதில் வைத்து புதிய திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இருவரிடமும் இதனை தெரிவித்து விட்டேன். அவர்களும் சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளனர். தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன’’ என்று தெரிவித்து உள்ளார். இந்த தகவலை இருவரின் ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1