ஆப்பிள் நிறுவனம் மற்றும் எபிக் கேம்ஸ் நிறுவனங்கள் சட்ட போராட்டம் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்று விவரங்கள் இதுவரை இல்லாத வகையில், அதிக வெளி உலகத்திற்கு அம்பலமாக வருகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் பில் ஸ்கில்லர் ஆப் ஸ்டோர் கமிஷனை குறைக்க திட்டமிட்ட விவகாரம் அம்பலமானது. இந்த விவகாரம் எபிக் கேம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பித்த சுமார் பத்து ஆண்டுகள் பழைய மின்னஞ்சல் மூலம் வெளியானது.
அந்த வரிசையில் தற்போது, ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் நானோ எனும் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோன் 4 ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மற்றும் அளவு சிறிய ஐபோனினை 2010 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐபோன் நானோ பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஐபாட் டச் மாடலை சார்ந்து குறைந்த விலை ஐபோனினை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.